சசிகலா விஸ்வநாதன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌

இன்றைய அழகிய சிங்கரின் என்பா

(1)
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌
குடிப்போருடனும் குடும்பம் நடத்த முடியாது
இவர்கள் “இன்னார்” என்று எப்படி
இனம் கண்டு கொள்வது?

(2)
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
காமாந்தகருடனும் குடும்பம் நடத்த இயலாது.
குறிக்கோள் இல்லாதவருடன் வாழ இயலுமா?
விதி விட்ட வழி.

(3)
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
மூர்க்க மூடனுடனும் குடும்பம் நடத்த முடியாது.
இறுமாப்பு கொண்டு
அலைபவரருடனும்; அப்படியே.
மங்கையர் பாடு திண்டாட்டமே.

(4)
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
பொய்யுரைப்போருடனும் குடும்பம் நடத்த முடியாது.
ஏமாற்றிப் பிழைப்போரை சமாளிக்க இயலாது.
எப்படித்தான் குடும்பம் நடத்துவது?

(5)
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
பன் முகம் காட்டும் வித்தகர்;
அவருடன் ஒரு நாளும் இணையலாகாது.
உலகில் பலர் இப்படியே.