
என்பா 1
ஒழிந்த நேரத்தில்
கவிதை எழுதுகிறேன்
ஒழிந்த நேரத்தில்
கதை எழுதுகிறேன்
ஒழிந்த நேரத்தில்
கட்டுரை எழுதுகிறேன்
ஒழிந்த நேரத்தில் படியுங்கள்
என்பா 2
ஒழிந்த நேரத்தில்
கவிதை எழுதுகிறேன்
கவிதை எழுதத் தோன்றுவதே
அற்புதம்
வணங்கி வணங்கி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கலைவாணியின் அருள் வேண்டும்
என்பா 3
ஒழிந்த நேரத்தில்
கவிதை எழுதுகிறேன்
அதை யாராவது
படிக்கிறார்களா
என்றால்
பெரும் மகிழ்ச்சி
அடைவேன். பாராட்டி
வார்த்தைச் சொன்னால் போதும்..
