அழகியசிங்கரின் 5 என்பாக்கள்

என்பா 1

மழை மழை மழை மழை
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது
வெளியே காலடி எடுத்து
வைக்க முடியவில்லை
எங்கும் போக முடியாமல்
மழை மழை மழை

என்பா 2

மழை மழை மழை மழை
மழையைப் பற்றிய செய்தி
அர்த்தமுள்ளதாக
இருக்கிறது. ஏனோ பலித்து
விடுகிறது. எப்படியோ துயரத்தைக் கூட்டுகிறது

என்பா 3

நானோ நீங்களோ ஒன்றும் செய்ய
முடியாது. எங்கும் மழையின் முழக்கம்
மழை மழை மழை மழை
என்று ஓலமிடுகறீர்கள் நீங்கள்

என்பா 4

இன்று முழுவதும்
நான் வெளியே போகவில்லை
மழையும் என்னை விடவில்லை
2015ல் நடந்த கோர சம்பவம்
வேண்டாம் இனி இனி

என்பா 5

எல்லோரையும் மழையைப் பற்றி கவிதை
எழுதச் சொன்னேன்.
எல்லோரும் மழை மழை
என்று எழுதித் தள்ளி விட்டார்கள்.
நாங்கள் கவிதை மழையில்