
மழை மழை மழை மழை
படைத்தவன் காட்டில் சோக மழை
காப்பவன் காட்டில் தடுமாற்ற மழை
அழிப்பவனுக்கோ மகிழ்ச்சி மழை.
மழை மழை மழை மழை
இடிக்கும் மின்னலுக்கும் காதல் மழை
மேகத்துக்கும் மண்ணுக்கும் மோக மழை
வானத்துக்கு சோக மழை.
மழை மழை மழை மழை
மாடி வீட்டில் கொண்டாட்ட மழை
குடிசை வீட்டில் திண்டாட்ட மழை
வீடில்லாதவனுக்கு மண்டப மழை.
