ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

  1. ஈரமுடன் இருந்தால் இல்லறப் பெருமை
    வீரமுடன் மனம் துணிந்தால் நேர்மை
    தரமுடன் பேணிட யாரும் சொல்லுவார்
    எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.
  2. விரும்பிட விரும்பின் விலகாது காதல்
    கரும்பின் சாறும் கனிந்திட இனிக்கும்
    குருவிடம் கற்றிட உலகம் போற்றும்
    எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.
  3. குறையும் நிறையும் சேர்ந்தே யாவும்
    இறையும் வேண்டிடப் பணிதல் பயனே
    கறையிலா ஒழுக்கமும் உழைப்பும் உயர்த்தும்
    எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.

சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்