சும்மா சும்மா/சசிகலா விஸ்வநாதன்

சும்மா சும்மா சும்மா சும்மா

சுற்றாது, சும்மா இருந்தே சொல்

அற, நில்!” என்றே சொன்னாலும்;

அடங்குவது இல்லையே, மனது.
🪷
சும்மா சும்மா சும்மா சும்மா

சுற்றும் மனது,நிலை பெற,

சுகம் தரும்
சொக்கேசன் மலர்

பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!
🪷
சும்மா சும்மா சும்மா சும்மா,

என்றே நினைத்து எழுதிய ஓலை

ஒன்று; சுந்தரன் என்ற ஒருவனை

சும்மா வந்து ஆட்கொண்டதுவே.