“கருணைப் பழம்”/மீ. விசுவநாதன்

ரஷ்யா உக்ரைன் போர்
பங்களாதேஷ் கலவரம்
பாலஸ்தீனப் படுகொலைகள்
இலங்கை உள்நாட்டுக் கலவரம்
மணிப்பூர் ரகளை
கல்கத்தா மருத்துவர் கற்பழிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகள்
வயநாடு நிலச்சரிவின் சோகம்
இப்படியான துன்பங்களில்
இருத்து உயிர்களை
இறைவா நீதான்
கருணையுடன் காக்க வேண்டும்
என்று
வேண்டிக் கொள்ளும் நான்,
என் இடது கால் கட்டை விரலில்
மெதுவாக ஊறி வந்த
சிறு எறும்பை
என்
வலது பாதத்தால் தேய்த்து
ஏன்
கொல்ல வேண்டும் ?
அன்பெனும் காய்
கருணைப் பழமாக
எத்துணை பிறவியோ?
(28.08.2024 16.34 pm)