
அழகிய சிங்கரின் என்பா!
நண்பரின் வருகை தருமே ஆனந்தம்
இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்
காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !
ரயில் பயணம் என்றும் ஆனந்தம்
ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்
அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !
20/01/2025
