
அழகிய சிங்கரின் என்பா சரம்
🌨️ மழை🌨️
(1)
அலைபேசி திறக்க பண்புடன் வாழ்த்தும்
அன்பு உள்ளங்களின் மனதை மயக்கும்
சொற்களின் கவர்ச்சி தோரணங்களில், அன்பு
மழை! மழை! மழை!
(2)
இன்று போல் என்றும் வாழ்கவென,
வாழ்த்தும்,உறவும், சுற்றமும்,அறியுமா;
எனக்கு காய்ச்சலென; என்மனதில் கடுப்பு
மழை! மழை! மழை!
(3)
தீபாவளி வாழ்த்துகள்! ஒல்லையின்றி அலைபேசியில்,
வந்தவுடன் தெரிந்தது. ‘ வா’ எனும்
அழைப்பில்லை இந்த வருடமுமென; கண்ணீர்
மழை! மழை! மழை
(4)
அலை பேசும் செந்தூர் பதியில்,
அலை மோதும் மக்கள் கூட்டம்;
வேண்டுவது ஒன்றே! செந்தூரானின் கருணை
மழை! மழை! மழை!
(5)
ஐப்பசி பிறந்தாலே அடி வயிற்றில் ,
பயமும், கிலியும்,
கவலையும், கலக்கமும்,
போதும்! போதும்! இந்த பேய்
மழை! மழை! மழை.
