( அழகியசிங்கர் இன் என்பா சரம்)

(1)
பார் புகழும் கவிஞன் பாரதி;
‘படித்துப் பார்’என்று அளித்து,
கண்ணனை கண் முன் காட்டிய
பாரதி என் கடவுள்
(2)
பாரதக் கதையை திரட்டுப் பாலாக
குறையாத சுவையுடன் பக்குவமாகக் குறுக்கி,
பாஞ்சாலி சபதமாக எனக்கு அளித்த
பாரதி என் கடவுள்.
(3)
வெறும் வாய்ச் சொல் வீரனாக
இராமல், காதல் மனைவியை மகிமையுடன்
தனக்கு சமமாக நடத்திக் காட்டிய
பாரதி என் கடவுள்
(4)
தேவரத்தை தினம் தினம் கற்பித்து
திருப்பாவை முப்பதும் சொல்லிக்
கொடுத்த
என் விமலா பெரியம்மாவிற்கு அடுத்து
பாரதி என் கடவுள்.

gwuhw4