அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

பனி விழும் விடியல்களிலும்
மழைக்குப் பின் வெளிறிய
முன்மாலை பொழுதுகளிலும்
நள்ளிரவு நெடுஞ்சாலை
நிறுத்தங்களிலும்
அரைக் கோப்பை
தேநீர் கொண்டு
இருத்தலின் அத்தனை
இடர்களையும் ஒரு மிடற்றில்
கரைத்துவிடும் எனக்கு
அலுவலக மேசையில்
மேலாளருக்கு மட்டும்
பரிமாறப்பட்ட தேநீரின்
கசப்பு தொண்டையில்
விக்கி நிற்கிறது!
