
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை
சல்லடைப் போட்டு
சலித்துப் பார்த்தேன்…
எழுதியதில் போட்டிக்கு என்று
கவிதை தேறவில்லை.
சிந்தனை கழுவி
புதுப்பித்து பார்த்தேன்…
போட்டிக்கு எழுதிய எந்த
கவிதை தோதுமில்லை.
தனிமையின் மகிழ்ச்சி துணையில்
எழுத எத்தனித்துப் பார்த்தேன்…
போட்டிக்கு என்று எழுதக்
கவிதை ஏதுமில்லை.
பக்கத்துக்குக் கவிஞரின் காகிதத்தை
எட்டியும் பார்த்தேன்…
போட்டிக்கு என்று எந்த
கவிதை சேத்தியில்லை.
தெளிவாய் புரிந்தது
போட்டிப் போடாமலேயே
தோற்று விட்டேன்
எதற்குச் சிரமப்படுவானேன்?
அதையே எழுதியும் விட்டேன்,
போட்டிக்கென்று…
