க. செல்லப்பாண்டி/உயிர்த்தெழுதல்

(ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதை)

நிழற்படம் மாட்டுவதற்குக்கூட
சுவரில் ஆணி அடிக்க
அனுமதியில்லாத
வாடகை வீட்டில்
வாழ்ந்தவள்

வாக்கப்பட்டு வந்ததும்
தன் சொந்த
வீட்டில் ஆணி அடிக்கிறாள்

ஆணியால் சிலுவையில் அறையப்பட்ட
இயேசுவின் நிழற்படம்
மாட்டுவதற்கு