அனங்கன்/குறைகளில் நிறையும் நிறை

படியேறும் தருணத்தில்
பளிச்சென்று சிரிக்கிறது அந்தப்பூ.
இயற்கை அதற்கான நியதியை
ஒருபோதும் ஔித்துவைத்திருப்பதில்லை.
மலர்ச்சியை வெடிப்புகளிடையே ஔிரவிட்டு
தன்னிருப்பை நிறைசெய்கிறது அச்செடி.
இருக்குமிடம் எதுவானால் என்ன …
மனதை மலரவிட்டு வாழ்வது
அனைவருக்கும் வாய்ப்பதில்லை.
இன்னொரு பூவுக்கு
காத்திருக்கும் வெறுமையில்
இன்னும் காலம் நீளப்போகிறது.