
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
வலியோடு வெடித்த அப்பாவின்
கோபம்
கெஞ்சிப் பரிதவித்த அம்மாவின்
வருத்தம்
கொள்ளிவாய் என்றழைத்த
நண்பர்களின் ஆதங்கம்
புகைவண்டி இவன் என்ற
மடந்தையரின் கிண்டல்
செல்லமாய் சண்டையிட்ட
மனைவியின் அக்கறை
உடலுக்குத் தீதெனச் சொல்லும்
என்னுடைய அறிவு
ஈதெதற்கும் அசராத நான்
ஒரு நாள்
நெஞ்சுக் கூட்டுக்குள் புகுந்து
தேள் ஒன்று கொட்ட
புகைப்பதை விட்டு விட்டேன்
