சுந்தரராஜன்/பொங்கலும் பீட்சாவும்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

என் அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது.
அவள் தரும் பொங்கலுக்கு. உலகத்தையே தரலாம்.
சுவை அரும்புகளுக்குத் தீனி போட்டவள் அவள்.

அம்மாவுக்கு நாலு தங்கைகள் ஒரு தம்பி .

காசியில் மைசூரில் பாலக்காட்டில், நெல்லூரில்.
காசி சித்திக்கும் அம்மாவுக்கும். செல்லமாய் தகராறு.
காவேரியா கங்கையா எது முதலில் வந்தது என்று
இருவரும் இரட்டையர்கள்.

எல்லோரும் எல்லா இடங்களுக்கும் போய் வருவோம்.

காசியில் ஜிலேபியும். பேடாவும் . லஸ்ஸியும் இனிக்கும்
நெல்லூரில்.பப்புவும் பெசரட்டும் கோங்குராவும் பிடிக்கும்.
பாலக்காட்டில் பழம்பொறியும்
சக்கைப்பிரதமனும் பிடி பிடிப்போம்.
மைசூரில். போண்டாவும். பிஸி பேலாவும்.
அள்ளித் தின்போம்.
ஆனாலும். தஞ்சாவூர் பொங்கலுக்கு.
அனைவரும் அடிமை.

இதெல்லாம் மாமா அமெரிக்கா
போய்விட்டு வரும்வரை.

இப்போ எங்கள் வீடு சித்திகள்
வீடு எல்லாம் மாறிப் போச்சு .
எல்லா இடங்களிலும் பிரட்டும் பீட்ஸாவும் தான் ..
இப்போது யாரும் யார் வீட்டுக்கும் போவதில்லை
பொங்கல் ஜிலேபி பெசரட் சக்கை
பிஸிபேலா திரும்ப வருமா?
இல்லை. அவை இனி. மெல்லச் சாகுமா?