புஷ்பா விஸ்வநாதன்/இவளும் ஒரு பத்தினிதான்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

கணவனின் கட்டளையால்
கற்பைப் பறைசாற்றக்
கனல் கக்கும் தீக்குளித்த
சீதை ஒரு பத்தினி

கணவர் ஐவரானாலும்;
ஒருவனுக்கு ஒருத்தியாய்
உத்தமியாய் வாழ்ந்த
திரௌபதி ஒரு பத்தினி

கணவனைப்பழி சொன்ன
அரசனைக் கண்டித்து
ஊரையே எரித்த
கண்ணகி ஒரு பத்தினி

கணவன் கைவிட்டபின்
கண்டவனுக்கும் கடமையாய்
முந்தானை விரித்து
உச்சம் தொட்ட வேளையிலும்
உடலை மறந்து
பாலுக்கழும் தன் பாலகனை
நினைத்து உளமுருகும்
அத் தாயும் ஒரு பத்தினிதான்

One Comment on “புஷ்பா விஸ்வநாதன்/இவளும் ஒரு பத்தினிதான்”

Comments are closed.