
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
காதலும் வீரமும் மட்டுமே இலக்கியம்;
அது அந்தக் காலம் – இன்றோ,
காலைக் காப்பியில் தொடங்கி,
இரவு உணவு வரையும்,
காத்து நிற்கின்றன ஆயிரம் பிரச்சினைகள்;
அவற்றிற்குத் தீர்வு காண
ஆட்களில்லை இங்கு…
காவிய காதலுக்கும், காப்பிய வீரத்திற்கும்
நடைமுறை வடிவமைக்க – ஒரு
தலைமுறையே அலைகிறது!
