
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
முடைந்த கீற்றில்
உயிர்த்த தெய்வம்
காட்சியாக நிற்கிறது.
சல்லடையிட்ட புள்ளிகள்
தீர்த்திடவில்லை
முடைந்தோரின் பசியினை.
வேடிக்கை பார்க்கும்
கூட்டத்திற்கொன்றும்
குறைவில்லை.
பத்தில் ஒருவர்
வாங்கியிருந்தாலும்
பசியாவது ஆறியிருக்கும்.
பித்தம் தெளியா மனங்கள்
பார்வைக் கடத்தலில்
உச்சுக் கொட்டிப் போனது.
சித்தம் இதுவேயென
இன்னும் முடைந்து
கொண்டிருக்கிறாள்.
தீர்ந்திடவில்லை
இன்னும் பசி.
