
பாங்கோதும் ஓசையும்
தேவாலய மணிச்சத்தமும்
கோவிலின் காண்டாமணிச்சத்மும்
ஒட்டு மொத்தமாய் கேட்க
சிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள்
அது கண்டு
சிலையாகிப்போய் சொல்கிறேன்
அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்கு
என்னை விட்டு சிறிது நேரம்
ஓய்வெடுக்க தோன்றியதே
அது போதும் எனக்கு
