ரவி ஜி/நிழல் என்கிற நீ…!?

(ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை)

விரியும் இரவில்
நிலவுக்குப் போட்டியாய்
எரியும் தெருவிளக்குகள்
கம்பங்களின் வரிசையை
மாறி மாறி முந்துகிறோம்
கண்ணாமூச்சி ஆடுகிறோம்
நானும் நிழலுமாய்
இணைந்து நடந்த நீ
எதிராகிக் கடக்கிறாய்
இடமாறு தோற்றப் பிழையாய்
நிழலும் நீயும்