அழகியசிங்கர்/பயங்கள்

                               

(20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்)

                                 பயங்களும் ஓர்நாள் முதிரும்
    புதியதாய் உருவாகிய பயங்களும்
    முதிர்ந்து பழகிய பயங்களும்
    சேர்ந்து உருட்டும்
    பழகிய தெருவில்
        மரமும் இருட்டுடன் அடிக்கும் கூத்து
    காலையில் வேறுவிதமாய்த் தோற்றம் தரும்
    வேண்டாமென்றால் விடப்போவதில்லை
    எத்தனையோ வருடங்கள் பழக்கமாகி
    இன்னும் ஏன் விடவேண்டும்
    இருந்து விட்டுப் போகட்டும்
    பயங்களுடன் வாழ்க்கை

அழகியசிங்கர்/சுழன்று – விருட்சம் நாளிதழ்