
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
நான் காற்றிலும் கவிதையிலும் வாழ்கிறவன்
கரடு முரடுகளில் தேடித் தோற்காதீர்கள்.
நான் உண்மைக்கும் உழைப்புக்கும்
ஊதியம் வாங்குகிறவன் என்னை உதாசீனத்தாலும்
ஊழலாலும் களவெடுக்காதீர்கள்.
நான் பொறுமையாலும் பொக்கிஷத்தாலும் விதைக்கப்பட்டவன்
என்னைப் போலிகளாலும் பொய்களாலும்
அறுவடை செய்யாதீர்கள்.
மனிதாபிமானத்துக்கும் மலர்களுக்கும் சொந்தக்காரன்
என்னை மாணவங்க படுத்தியும் மனசாட்சியை விட்டும்
சுருக்குப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
நான் ஆன்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் அலையானவன்
என்னை அத்துமீறலிடமும் ஆணவத்திடமும்
கூட்டிப் போய் ஆபத்துக்குள்ளாகாதீர்கள்.
