
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
வானம் கம்மென்றிருந்தது
தெரு அசையவில்லை
வாசலுக்கு முன்புறக் கதவுகள்
அடைத்துக் கிடந்தன
கூடடையும் பறவைகளும்
தங்கள் பயணத்தை
முடித்துக் கொண்டன போலும்
ஏழாவது முறையாகப் பார்த்தும்
வானில் ஒரு நட்சத்திரம்
தென்படவில்லை அவனுக்கு
உயிரற்ற பொழுதைச் சபித்தபடி
கல்லாகக் கிடக்கிறது மனது
நினைவுகள் தொடும் தூரம் வரை
வெறுமை தான் விரவிக் கிடக்கிறது
விதம் விதமாக மினுக்கும்.
இதனைக் கொண்டு தான்
நம் வாழ்க்கையைத் தள்ளியாக வேண்டும்
மற்றும் இந்த வெறுமை தான்
நம்மை இந்த வெறுமையிலிருந்து
கடைத்தேற்றவும் வேண்டும்
பராபரமாய்
