எல் ரகோத்தமன்/கிழவியின் சிரிப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

அந்த ஓவியத்தை
பார்த்துக் கொண்டிருந்தேன்!
வண்ணங்கள் ஈர்த்தன!
ஆனால் எதுவும் புரியவில்லை!
உற்று பார்த்தேன்
ஒரு கிழவியின் பொக்கைவாய் சிரிப்பு
தெரிந்தது!
எங்கள் ஊரில் இதே போல்
ஒரு பொக்கைவாய் கிழவி இருந்தாள்!
அவள் ஒரு நாள் திடீரென
ஊர் குளத்தில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டாள்!
அந்த வயதிலும் அக்கிழவிக்கு
உயிரை மாய்த்துக் கொள்ளுமளவிற்கு
என்ன ஆற்றாமை என
இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
கிழவியின் தற்கொலைக்கான விடை
ஓவியத்தில் ஒளிந்திருக்கிறதோ!
எல்லாம் ஊகம் தான்!
கிழவியின் சிரிப்பைத் தவிர!