ஷாஅ/சம வெளியில் கெட்ட கனவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

எல்லாச் சரிகளுக்கும்
குறைபாடுகளுடன் ஒரு ஜென்ம பந்தம்
இருக்கத்தான் செய்கிறது
பயனில் இருக்கும்
தலைப்பாகையை தோள் துண்டைவிரிப்பை
நாற்காலியைச் செருப்பை
உன் என் சாப்பாட்டுத் தட்டுக்களை
நீ இட்ட மெல்லிய கோட்டின்
எந்தப் பக்கம் வைப்பது

வெட்டி விசனம் இல்லை விகாரம் இல்லை
கோட்டின் இரு பக்கமும்,
கோடுதனை மறைத்தும்
தன்னாலே பசும்புல் வளர்ந்து
முன்னாலே செழிப்பாயிற்று காண் நிலம்

சப்பணமிட்டு உட்கார, எல்லோரும்
அங்குமிங்கும் போக வர
மிருதுவாக இருக்கிறது கால்களுக்கு

திரும்பி ஒருவாய் அள்ளுவதற்குள்
களை எடுக்க வேண்டும் என்கிறாயே
எங்கே, எது