கீர்த்தி/விட்டுச் சென்றவை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

நான் தின்றதுபோக
இன்னமும் கொஞ்சம்
பழங்கள் இருக்கின்றன
அம்மரத்தின் தாழ் கிளையில்.
அவற்றை உண்பதற்கான
சிறுபசியும்கூட மீதமிருக்கிறது
பறித்தெடுத்துச் செல்ல
கையில் இருக்கவே செய்கிறது கூடையும்.
பழங்களை விட்டுவிட்டே
நடக்கிறேன் இப்போது.
நான் வந்தபோது
கனிந்து கிடந்த பழங்கள்
என்னைப்போல் யாரேனும்
சிறு பசியோடு விட்டுச் சென்றதாகவும்
இருக்கலாம்தானே
அடுத்து வரவிருந்த எனக்காக.