
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
ஒற்றை மர பின்னணியில்
ஒளிந்து கொள்ளும் நிலவே!
அரை வட்ட வடிவில்
என்னைத் திட்டம் போட்டு
என் மனதை திருடும் உயிரே!
பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு மரத்தின் இடையே
என்னைப் பார்த்து ரசிக்கும் மதியே!
வாடிய என் முகமும்
உனை பார்த்து மாறுது புன்னகையாய்!
என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்திய
வெண்ணிலவே என்றும் மறையாது உனதழகு!
என் இனிய இயற்கையே!
அமைதியில் அகப்பட்டுக் கிடக்கும் ஏரியில்
அன்பே பிரதிபலிக்கும் உன் பிம்பத்தால்
என்மனதைக் கட்டி இழுத்த
இரவின் அழகிய ஒளியே…
