
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
பணிகிறார்கள்
பழிக்கிறார்கள்
பயப்படுகிறார்கள்.
உடைத்தெறிகிறார்கள்.
தொழுகிறார்கள்
தூக்கியெறிகிறார்கள்
கொண்டாடுகிறார்கள்.
கழுவிலேற்றுகிறார்கள்.
காணிக்கை குவிக்கிறார்கள்
கஜானா களவாடுகிறார்கள்.
கதைகள் பரப்புகிறார்கள்
கட்டுக்கதையென விமர்சிக்கிறார்கள்.
காப்பியம் வடிக்கிறார்கள்
கழிசடை என்கிறார்கள்.
எங்கும் இருக்கிறதென்கிறார்கள்
இல்லவே இல்லையென்கிறார்கள்.
சாமியே இல்லையென்கிறார்கள்.
என் சாமி/ஆசாமிகளே இறையென்கிறார்கள்.
தப்பு செஞ்சா
உம்மாச்சி வந்து கண்ணைக் குத்துமாம்.
தப்புகள் நடப்பதில்லையா?
உம்மாச்சிக்கே கண்ணில்லையா?
