சித்தவனம்/மண்ணடி பாபா

அருள்வெளி சித்தர் பாபா சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த ஒரு அண்மை கால சித்தர்.
இவர் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து, பின் ஞானம் பெற்று சமூக வாழ்வியல் உணர்வுகளில் இருந்து விட்டு விடுதலையாகி சித்தராக பரிணமித்தார். (evolved/transformed)
இவர் சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் நீண்ட காலம் இருந்ததால் “மண்ணடி பாபா” என்றும் அழைக்கப்படுகிறார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவர் நலமுடன் திரும்புவார் என்றும், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் மறைவார் என்றும் முன்கூட்டியே கணித்துக் கூறியதாகக் கூறப்படுகிறது.
எண்ணற்றோர் வாழ்வில் ஏற்றமிகு வாழ்வை ஏற்படுத்தியவர். துயர்களை நீக்கியவர். சென்னை பாரிஸ், லிங்கி செட்டித் தெருவில் ,அவர் அதிகம் அமர்ந்திருந்த கடை வாசலில் ..சிறியளவில் ஓர் பீடமும் , சிற்பமும் அமைக்கப்பட்டு…இன்றளவும் அவரால் அனுக்கிரகம் பெற்றவர்கள் நன்றியோடு வழிபட்டு வருகிறார்கள்.

இவரது மஹா ஜீவசமாதி ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சானாரப்பாண்டை (Sanarapandai) நென்மேலி பகுதியில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இவரது மஹா குருபூஜை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அருள் வெளி சித்தர் பாபாவின் 38-வது ஆண்டு மஹா குருபூஜை வரும் 13-2-2026 நடைபெறுகிறது.
அதேபோல், அவர் நடமாடிய பாரிஸ் லிங்கிசெட்டித் தெருவில் உள்ள அவரது பீடத்திலும் 12-2-2026 இரவு விமர்சையான ஆராதனைகளும், ரத ஊர்வலமும் நடைபெறும்.

முகவரி: அருள்வெளி சித்தர் ஜீவசமாதி, சானாரப்பாண்டை (Sanarapandai), நென்மேலி கிராமம், ஸ்ரீபெரும்புதூர்.
செல்லும் வழி:
சென்னையிலிருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) ஸ்ரீபெரும்புதூர் வரை வர வேண்டும்.
அங்கிருந்து வடமங்கலம் (Vadamangalam) வழியாக நென்மேலி செல்லும் பாதையில் சுமார் 6-8 கி.மீ தொலைவில் சானாரப்பாண்டை கிராமம் உள்ளது.

ஹரி ஓம் மஹா காளி !

Shivaya namah….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன