
திருவண்ணாமலை எனும் ஞானபூமியில் ஏகபட்ட சித்தர்கள் நடமாடினார்கள், பலர் அங்கே சமாதியுமானார்கள் ஆனால் திருவண்ணாமையின் அடையாளம் என மூன்ரு விஷயங்களை சொல்வார் காஞ்சி மஹாபெரியவர்
“அண்ணாமலையார், ரமணர், சேஷாத்திரி சுவாமிகள்” என்பது அவர் வாக்கு
இதனைவிட தெளிவாக அழுத்தமாக சேஷாத்திரி சுவாமிகளை பற்றி சொல்லமுடியாது, அந்த அளவு அங்கே ஒரு சித்தராய் முத்திரை பதித்து வாழும்போது மட்டுமன்று இன்றும் என்றும் அவர் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்
சிவபெருமானுக்கு எப்போதுமே அந்த திருவண்ணாமலை அருள்பாலிக்கும் தலம், அவரின் அன்பும் கருணையும் கொண்டோரை அவர் அங்கு அனுப்பிகொண்டே இருப்பார் அவர்களும் பெரும் காரியம் ஆற்றுவார்கள்
17ம் நூற்றாண்டில் தொடங்கிய மதமாற்றம், 18ம் நூற்றாண்டில் தமிழகத்தில் அதிகரித்தது , 1857ல் பிரிட்டிசாரின் நேரடி ஆட்சிக்குள் இந்தியா சென்றதும் அதிகாரம் அவர்களிடம் சிக்கியதும் மதமாற்ற கும்பல்களின் அட்டகாசம் பெருகியது
இந்துமதம் காலத்துக்கு ஏற்ப சவால்விடும் மதம், அது அந்த கொடும் காலங்களிலும் தன்னை காத்துகொள்ள சிலரை உருவாக்கும்
அந்த 18ம் நூற்றாண்டில் இந்துமதம் மிக கொச்சைபடுத்தபட்ட போது பல அவதாரங்கள் வந்து இந்துமதத்தை தாங்கின அவை ஒருசேர வந்தன என்றாலும் அதனில் முக்கியமனதும் மூத்த அவதாரமுமானது சேஷாத்திரி சுவாமிகள்
உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் 1870 ஜ தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் அன்று பிறந்தார் ஜாதகபடி அவருக்கு சன்னியாசி யோகம் என்பதால் வீட்டிலே அவரை சன்னியாசிபோலத்தான் கருதினார்கள், அதற்கெற்ற அத்தனை இயல்புகளும் அவரிடம் இருந்தன
அவதாரங்களுக்கு வரும் அனைத்து சோதனையும் அவருக்கும் வந்தது, 14 வயதில் தந்தையினை இழந்தார், 19 வயதில் தாயினை இழக்கும் நேரம் அவர் சொன்ன “அருணாச்சலா அருணாச்சல அருணாச்சலா” எனும் அந்த வார்த்தைகள் சிவனின் குரலாகவே அவருக்கு கேட்டது
தன் 19ம் வயதில் அதவாது 1889ம் ஆண்டு திருவண்ணமலைக்கு வந்தார்
அவரிடம் அபரிமிதமான் சிவனருள் இருந்தது, ஒரு உடலில் அபரிமிதமான அருள் பிரபஞ்ச அருள் வரும்போது அந்த உடலாலும் சிந்தையாலும் அதை தாங்க முடியாது, ஒருவித பித்துநிலையினை அது கொடுக்கும்
மானிட உலகில் அவர்கள் பைத்தியமாகவும் , அடாவடி செய்பவர்களாகவும், புரிந்துகொள்ளமுடியாமல் ஒதுக்கிவைக்கபட்டவர்களாகவும் இருப்பார்கள்
ஆனால் இறையருள் அவர்களில் செயலாற்றுகின்றது என்பதை புரிந்துகொள்ள காலமாகும், அதுவரை பித்தன், சித்தம் கலங்கியவர்கள் என அவர்கள் ஒதுக்கி வைக்கபடுவார்கள்
பித்தர்கள் என அவர்கள் அழைக்கபடுவார்கள் என்றுதான் “பித்தா பிறைசூடி” என சுந்தருக்கே அடியெடுத்து கொடுத்தார் எம்பிரான்
அலங்கார உடையும், அதிகார செல்வ தோரணையும், வசீகர அடையாளமும் செல்வமும் கல்வி பெருமையும் கொண்டதே செல்வாக்கு என கருதும் உலகில், படிப்பும் செல்வமும் அதிகாரமுமே ஒருவன் தகுதியினை நிர்ணயிக்கும் என கருதும் உலகில் அவர்கள் அஞ்ஞான கண்ணுக்கு அப்படித்தான் தெரிவார்கள்
ஆனால் அவர்கள் ஞானியர் மேற்சொன்ன அனைத்தும் மாயை இறைவன் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்ந்து எல்லாம் கடந்த மனநிலையில் இருப்பார்கள்
எல்லாம் கடந்தவர்கள் என்பதை எல்லாம் இழந்தவர்கள் இழக்க ஏதுமற்ற நிலையில் இருப்பவர்கள் என்றும் சொல்லலாம்
அந்நிலையில் செல்வம், கல்வி,மதிப்பு, மரியாதை என எதையும் அவர்கள் கருதமாட்டார்கள், தாய் குழந்தை மடியில் விளையாடுவதை போல இறை சன்னதியில் குழந்தை மனதோடு ஆடிபாடுவார்கள்
அப்படித்தான் அந்த ஞானசித்தரும், 1890 முதல் அங்கு கோவில் குழந்தையாக் விளையாடி கொண்டிருந்தார் முதலில் அவரை ஒருமாதிரி ஒதுக்கி வைத்த சமூகம் பின்னால் அவர் தொட்டதெல்லாம் துலங்குகின்றதுஎன்பதை அறிந்து “தங்க கை சித்தர்” என கொண்டாடிற்று
அவரின் அற்புதமான காரியங்கள் அப்படி இருந்தது, கன்னியாகுமரி மாயம்மா போல மாய வேலை அத்தனையும் செய்தார்
தீடீரென யாரையாவது கட்டி பிடிப்பார், திடீரென உமிழ்வார், அவர்கள் துன்பம் தீரும், சிலரை விரட்டி விரட்டி அடித்திருக்கின்றார், சிரித்துகொண்டே அடிபட்டவர்கள் பாக்கியசாலிகள் என பின்னால் உணர்ந்தார்கள்
வீதிகளில் செல்லும்போது திடீரென ஒரு கடைக்குள் புகுந்து எல்லாம் உடைத்து போட்டு வருவார், அதன்பின் அக்கடைக்கு ஏற்றம் ஒன்றே கிடைக்கும்
இப்படி பித்த சுவாமிகளாக தன் விளையாட்டினால் எல்லோர் கர்மாவினையும் இழுத்து தீர்த்து அங்கு சுற்றிவந்தார்
அவர் செய்த ஆச்சரியங்களும் அற்புதங்களும் ஏராளமானவை, வம்ச வம்சமாக சாட்சிகள் அன்றும் உண்டு இன்றும் உண்டு
உலகத்தார் பார்வைக்கு அவர் அற்புதம் செய்யும் ஞானசித்தராக தெரிந்தாலும் பிரபஞ்சம் அவரை அங்கு அனுப்பிய காரணமே வேறு
திருவண்ணாமலை கோவிலுக்கு முதல் சிக்கல் துக்ளக் காலத்தில் 13ம் நூற்றாண்டில் வந்தது , மாலிக்காபூர் நொறுக்கிபோட்ட ஆலயத்தை துக்ளக் அடைத்து வைத்தான், வல்லாள தேவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது
பின் கம்பண்ண உடையார் காலத்தில் அது மீண்டது
16ம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தானின் தளபதி அப்சல்கானிடம் அப்பக்கம் சிக்கி அவன் காலத்தில் அது பூஜையின்றி பாழ்பட்டது, அப்போது அக்கோவில் அருகே ஒரு பள்ளிவாசல் கட்ட திட்டமிடும் அளவு நிலமை இருந்தது
ஆனால் வீரசிவாஜி எழும்பினான், அப்சல்கானை கொன்றுபோட்டான் தமிழகம் வரை வந்து திருவண்ணாமலை சிதம்பரம் ஆகிய ஆல்யங்களை மீட்டெடுத்தான்
அவன் காலத்தில் அது மீள தொடங்கி ஒளிவீசிற்று
ஆனால் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவுரங்கசீப்பிடம் மீளவும் வீழ கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலாகி பின் பிரிட்டிசார் காலத்தில் நிலமை குழப்பமானது
மதமாற்ற கொடுமையும் இந்து இழிவும் அப்போது உச்சத்தில் இருந்தன
மிக மிக பரிதாப நிலை என்னவென்றால் இந்துக்களுக்கு அரசனும் இல்லை அமைப்பும் இல்லை சங்கமுமில்லை, உலகெல்லாம் குறிப்பாக ஐரோப்பா அமெரிக்காவிலெல்லாம் இந்துமதம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொச்சைபடுத்தபட்டு இழிவுபடுத்தபட்டது
இந்துக்கள் எனும் பெயரே இழிவானவர்கள் எனும் நிலைக்கு பிரிட்டிஷார் பிம்பம் உருவாக்கினார்கள்
காரணம் ஒருவன் கையில் இருக்கும் ரத்தினத்தை பறிக்கவேண்டும் என்றால் அது ரத்தினம் அல்ல, கல் வெறும் கல் என திரும்ப திரும்ப சொல்லவேண்டும் அவனை குழப்பி அதை வீசிவிட வைத்தால்தான் பறிக்கவும் முடியும்
தன்னிடம் உள்ள போலி கல்லை ரத்தினமென விற்கவும் முடியும்
அப்படி இந்துக்களை பழித்தபடியே இந்துகோவில் சிலைகளை கடத்துதல் ஓலைசுவடிகளை கடத்துதல் என ஒருபக்கம் திருடிகொண்டே இன்னொருபக்கம் மதமாற்றம் செய்தார்கள்
அந்த 1890களில்தான் மதமாற்றத்தை ஓரளவு தடுத்து ஒன்றுமே அறியா பித்தன் போல் சுற்றிவந்தார் சேஷாத்திரி சுவாமிகள்
அப்போது வடக்கே இருந்து ஒரு இளைஞன் பாரத தேசமெங்கும் சுற்றிவந்தான், அவனுக்கு தேசத்தின் எல்லா அருள்மிகுந்த தலங்களும் தெரியும்
அப்படி திருவண்ணாமலைக்கும் வந்தான் அப்போது அவனை யாருக்கும் தெரியாது, அழுக்கு காவி உடையும் மெலிந்த தேகமும் கொஞ்சம் தாடியும் கொண்டிருந்த இளைஞனின் கண்களில் மட்டும் தீர்க்கம் இருந்தது
அவனை உற்று நோக்கி கண்களால் சக்தி கொடுத்தார் சேதாத்திரி சுவாமிகள்
அதன் பின்பே அந்த இளைஞன் கன்னியாகுமரியில் தவமிருந்து ராமநாதபுர மன்னன் உதவிபெற்று அமெரிக்காவில் உலகம் அதிர இந்துமதததை விதைத்துவிட்டு வந்தான்
அவர்தான் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரும் சேதாத்திரி சுவாமிகளும் சந்தித்து கொண்டதாக ஆவணங்கள் இல்லை என்றாலும், இனத்தை இனம் அறியும் எனும் வகையில் அவர் அவரை பார்வையிலே அசீர்வதித்து அனுப்பியது நிஜம்
1896ல் விவேகானந்தர் அமெரிககவில் இந்துமதத்தை விதைத்துவிட்டு விடைபெற்ற வேளை இதே திருவண்ணாமலையில் செப்டம்பர் 1ம்தேதி ஒரு சிறுவன் கால் வைத்தான் அவன் பெயர் வெங்கட்ராமன் மதுரையில் இருந்து ஞானம் தேடி திருவண்ணாமலைக்கு வந்தவன்
அவனுக்கு அப்போதே ஞானதேடல் இருந்தது, கவுதாம்பீனி கோலத்தில் அவன் தவமிருந்தபோது சிறுவர்கள் அவனை பரிகாசம் செய்து கல்லால் அடித்து வம்புகள் செய்தார்கள்
அவர்களின் அளவுக்கு மீறிய அட்டகாசத்தால் யாரும் அறியாத பாதாள குகைக்கு சென்று தவம் இயற்றினான் வெங்கட்ராமன்
ஆனால் தவத்தில் அவன் தன்னை மறந்தான், ஆழமான தவத்தினை செய்தான் பசி நீர் எல்லாம் மறந்து அமர்ந்திருந்தான்
என்ன கோலம் ஆயிற்று என்றால் அவனை சுற்றி புற்றுவந்தது எறும்பு கூட்டம் வந்தது, பூச்சிகள் வந்தன அவன் முதுகினை பூச்சியும் எறும்பும் அரிக்கும் அளவு அவன் உடல் பாதிக்கபட்டது
ஆனால் அவன் ஆத்மா ஞான ஆத்மா, அப்போதே உடல் வேறு ஆத்மா வேறு எனும் ஞானம் இருந்ததால் அவன் உடல் பற்றி பிரக்ஞை இழந்திருந்தான்
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் உயிர் பிரிந்தாலும் ஆச்சரியமில்லை, உணவில்லை நீரில்லை கூடவே அவனை சுற்றி புற்றுவளர்ந்து உடலே அரித்துவிட்ட நிலை
வழக்கம் போல் திருவண்ணாமலை வீதிகளில் அனந்த தாண்டவம் ஞானத்தால் சிரித்தபடி ஆடிகொண்டிருந்த சேஷாத்திரி சுவாமிகள் முகம் சட்டென மாறிற்று
“சிவனே, அந்த உடல் வேண்டும் அது பல்லான்டு வாழவேண்டும், அதற்கான கர்மா முடியும் வரை அவன் வாழவேண்டும் அவனுக்கிட்ட கட்டளையினை அவன் நிறைவேற்ற அவன் உடல் வேண்டும்” என கத்தியபடி ஓடினார்
ஓடினார் ஓடினார் சரியாக அந்த குகையினை அடைந்து அந்த சிறுவனை கையில் ஏந்தி வந்தார்
அவ கையாலே அவனை சுத்தபடுத்தினார், ரத்த காயங்களும் வடுக்களும் இருந்தன
என்றும் கலங்காத சேதாத்திரி அன்று கலங்கினார், அவன் காயங்களில் கைவைத்தார் அது மறைந்தது, அவன் நெற்றியினை தொட்டவர் உச்சதலையில் கைவைத்தார்
அப்போது அவன் முழு ஞானம் அடைந்தான், அவனை “பால சுவாமி” என அறிமுகபடுத்தினார், அவனுக்கு உணவு ஊட்டினார், இனி நீ செய்யவேண்டியதை செய் என்றபடி வழக்கமான ஞானகூத்தில் இறங்கிவிட்டார்
அச்சிறுவனே ரமண மகரிஷி என பின்னால் பரிணமித்தவர்
இப்படி இருபெரும் பிம்பங்களுக்கு ஞானம் அருளிய தீட்சை அருளிய அவர் ஏராளமான அற்புதங்களை செய்தார்
அவர் காலத்தில் 1925ல் இந்து மகாசபை வந்தது, பின் ஆர்.எஸ்.எஸ் வந்தது, அரவிந்தர் பாண்டிச்சேரியில் மடம் தொடங்கினார், இன்னும் நீலகண்ட பிரம்மாச்சாரி ஆசிரமம் தொடங்கினார்
ஒரு இந்து எழுச்சி ஏற்பட்டது இந்துக்களிடை ஒரு உணர்ச்சி வந்து சங்கங்களும் இயக்கங்களும் பெருகின
அதனை பார்த்தபடி தன் 58ம் வயதில் மாசிமாத அஸ்த நட்சத்திரத்தில் சிவலோகம் அடைந்தார்
அவர் மிகபெரிய அவதாரம், காலத்தால் வந்த ஞான பெரும் ஒளி, அந்த ஒளிதான் திருவண்ணாமலை வீதிகளில் பித்தன் கோலத்தில் சுற்றி பெரும் காரியங்களை செய்தது
விவேகானந்தரின் வாழ்வில் அவர் அருள்பார்வை உண்டு, ஐரோப்பியரே தேடிவந்து இந்துமதம் ஏற்று வணங்கி நின்ற ரமணரை உருவாக்கியதிலும் அவர் உண்டு
ரமண்ர் உயிரை அவர் காத்தார் என்பது லவுகீக கணக்கு, தன் கையால் அவர் தீட்சை கொடுத்தா என்பது சித்தர்கள் கணக்கு
உலகம் முழுக்க இந்துமதம் பரவ அந்த சேஷாத்திர் சுவாமிகள் மகா முக்கிய காரணம், ஆனால் அஸ்திபாரமும் ஆணிவேரும் வெளிதெரியாது என்பதுபோல் அவரை பற்றி பலர் அறிந்திருக்கவில்லை
ஐரோப்பிய கிறிஸ்தவம் இந்தியாவினை முற்றுகையிட்டு கொச்சைபடுத்தி இழிவு செய்து மதமாற்ற முயன்றபோது ஓசைபடாமல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்துமதம் விதைக்கபட அவரே மூல காரணம்
இன்றும் திருவண்ணாமலை கிரிவலைபாதையில் அமைந்திருக்கின்ற தன் சமாதியில் அமர்ந்து கொண்டு தன்னை தேடிவருவோரின் குறையெல்லாம் தீர்த்துவைக்கின்றார்
யார் தனனை எங்கிருந்து தேடினாலும் ஓடிவந்து உதவுகின்றார்
திருவண்ணாமலையின் இக்கால ஞானசித்தர் வரிசையில் அவர் தலைமகன், அவர் கொடுத்த எழுச்சியே பின் ரமணர், யோகிராம் சுரத்குமார் என நீண்டு வந்தது
இன்று அந்த ஞானதலைமகனுக்கு, தங்க கை சித்தருக்கு பிறந்த நாள்
அந்த தங்க கை தேசத்தை ஆசீர்வதிக்கட்டும், தேச தலைமகன் மோடியினை ஆசீர்வதிக்கட்டும், தமிழக சிங்கம் அண்ணாமலையினை இன்னும் இன்னும் ஆசீர்வதிக்கட்டும்
தேசத்துக்காய் பாடுபடும் ஒவ்வொருவருரையும் ஆசீர்வதிகட்டும், ஞானம் தேடி அலைவோர்க்கு அவர் ஞானம் வழங்கட்டும்
உலகம் முழுக்க இந்துமதம் எழுச்சிபெறும் இந்நாளில் அவர் உலகெங்கும் இந்துமத்துக்கும் மக்களுக்கும் காவல் இருக்கட்டும்
இன்றைய நாள் அந்த தங்க கை சித்தரிடம் உங்கள் தேவை எதுவோ உங்கள் குறை எதுவோ அதை கேளுங்கள்
மனமுருகி கேளுங்கள், அதே குழந்தை சிரிப்புடன் அதே குதுகுலத்துடன் ஓடிவருவார், ஓடி வந்து உங்கள் கவ்லை எல்லாம் சிவனருளில் போக்கி தீர்த்துவைப்பார்
நீங்கள் யாராகவும் இருங்கள், எவ்வளவு பெரிய ஆபத்திலோ கவலையிலோ சிக்கலிலோ இருங்கள், ஆனால் அவரை அழைத்து மன்றாடி அவர் சமாதிக்கு வந்து வணங்குவதாக சொல்லி வேண்டி கொள்ளுங்கள்
நிச்சயம் உங்கள் வேதனை மாறும், உங்கள் கவலை தீரும், குறைகள் மறையும் அதன்பின் அவர் ச்மாதி சென்று வணங்கிவிட்டு திருவண்ணாமலை நாதனையும் தொழுதுவிட்டு வாருங்கள்
அந்த தங்ககை ஞானி உங்களையும் தொட்டு உங்கள் வாழ்வையும் தங்கமாக்குவார் இது சத்தியம்
இந்துக்கள் தலைவனற்ற இனமாக , உரிய வழிகாட்டுதல் இல்லா இனமாக், இழிப்புக்கும் பழிப்புக்கும் பரிகாசத்துக்கும் ஆளான காலத்தில் வந்து இந்துக்களை காத்து தன் அற்புதம் மூலமாக காத்து வழிநடத்தி இந்துக்களை இந்துக்களாக வைத்து, உலகெல்லாம் இந்துமதம் பரவ பெரும் காரணமாக இருந்தவர் அவர்
அவரின் பொன்மொழிகள் எக்காலமும் நிலைத்தவை
“நல்லவரும் அவரது புண்ணியம் பயன் அளிக்காதவரை துன்பத்தையே அனுபவிக்கிறார்கள். அதனால் புண்ணியத்தை விடாது சேருங்கள். அது பயன் அளிக்கும்போது அளப்பரிய ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.
பகவத் நாமா ஒன்றே துன்பத்தைக் களையும் வழி!
சத்சங்கம் ஒன்றே ஞானத்தை அடையவும் துக்கத்தைக் களையவும் சிறப்பான வழி.
பகவானையும் ஞானிகளையும் அடிபணிந்து வாழுங்கள். அது உங்களை ஆனந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.
ராமாயணம் உள்ளிட்ட ஞான நூல்களைப் பற்றிக் கொள்ளுங்கள். அதுவே உங்களை நல்லவனாக வாழ வழி கூறும்.
சிவமே குரு. குருவே சிவம்.
விபூதி, குங்குமம் இரண்டும் சிவ-சக்தி ஸ்வரூபம். எனவே, இரண்டையும் நெற்றியில் அணிய வேண்டும்.
மண், பெண், பொன் இவை நிலையற்றவை. ஞானம், மோட்சம் இவை மட்டுமே நிலையானது. பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்கு இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கிடைப்பதைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதுவே ஆசையை ஒழிக்கச் சிறந்த வழி”
என பெரும் போதனைகளை எளிமையாக கொடுத்தவர், இந்துக்கள் தங்கள் ஞானத்திலும் லவுகீக அடையாளத்திலும் நிலைபெற்றிருக்க வழிகாட்டியவர்
அவருக்கான மந்திரம் இதோ
“காமோ கார்ஷித்..மன்யுர கார்ஷித்..காமகரோதி..நாஹ கரோமி…”
இது சுவாமிகளின் மந்திரம். இதை தியானத்தில் ஒரு லட்சம் தடவை உச்சரிப்பவன் ஊழ்வினை அகன்று,இறை அவனை தேடி வரும் என்பார்கள்
லட்சம் முறை அல்ல அவரை நினைந்து சிலமுறை சொன்னாலே எல்லா நலமும் கூடிவரும்
அவர் எப்படியான ஞானத்தை கொண்டிருந்தார் என்பதற்கு அவர் வாழ்வில் அழகான காட்சி உண்டு
பரபிரம்மம் பற்றி ஒருவன் அவரிடம் கேட்டுகொண்டே இருந்தான், அவர் முதலில் பதில் சொல்லவில்லை
ஒருநாள் வீதியில் ஒரு எருமைமாட்டை முத்தி செய்து கொஞ்சிகொண்டிருந்தார் , கேள்வி கேட்டவன் அதை கண்டு கேட்டான் “சுவாமி என்ன எருமையினை கொஞ்சுகின்றீர்கள்?”
அவர் சொன்னார் “அடேய் இதுதான் பரபிரம்மம், நீதான் எருமை, எருமை”
இதைவிட எப்படி அத்வைத தத்துவத்தை ஒருவர் விளக்கமுடியும்? அவர்தான் சேஷாத்திரி சுவாமிகள் எனும் ஞானபெருங்கடல்
அந்த மாபெரும் அவதாரம் ஒரு இந்துவாக திருவண்ணாமலையில் நமக்காக வந்தது எனும் கர்வத்துடனும், உலகெல்லாம் இந்துமதம் எழ காரணமாயிருந்தது எனும் நன்றியுடனும் அவரை வணங்கி தொழுவோம்
