
தங்கச்சி உன் வாழ்க்கை இப்படியாகுமின்னு கனவுல கூட நெனைச்சுப் பார்க்கலயேம்மா. உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்கின மாப்பிள்ளை இப்படி அல்பாயுசுலே போயிட்டாரே.ரெண்டு சின்னப் பசங்கள ஒத்தையாளா எப்படி வளர்ப்பே…இப்பவே எங்களோட கெளம்பு…
அண்ணியின் முகத்தில் தெரிந்த தவிப்பை இனம் கண்டு கொண்ட மேகலா….
அண்ணே…யதார்த்தமா யோசிக்கணும்.என் புருஷனோட சில வருஷங்களே வாழ்ந்தாலும் அவங்கவங்க சுமையை அவங்கவங்கதான் சுமக்கணும்னு பழக்கியிருக்காரு.
இந்தக் குழந்தைங்க ரெண்டு பேரும் அவரு எனக்காக விட்டுட்டுப் போயிருக்கிற சுகமான சுமைங்க… இவங்களை வளர்த்து ஆளாக்கி அவருக்கு மட்டுமில்ல… உங்களுக்கும் பெருமை தேடித் தருவேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குண்ணே…. நீ தைரியமாப் போயிட்டு வா…..
வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழும் தங்கள் நிலையை உணர்ந்த நாத்தனாரிடம் விழிகளால் நன்றி தெரிவித்தாள் அண்ணி கண்ணம்மா.
