
அப்பா இல்லாத
பிள்ளைகளின் முகத்தில்
அடுத்தவர் கண்களுக்கு
அவ்வளவாகப் புலப்படாத
அருவமானதொரு
அநாதைத்தனம்
அப்பிக்கொண்டிருக்கும்.
முதல் பார்வையிலேயே
அதை அறிந்தவர்களாக
அரவணைத்துக் கொள்கிற
அபூர்வமான பெண்கள்
இப்போதும் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம்
அத்தனை சிறிய வயதிலேயே
எத்தனையோ பெரிய குழந்தைகளுக்கு
அன்னையர் ஆகிவிடுகிறார்கள்
