
அரக்கன் பூமித்தாயைத் தூக்கிச்சென்றபோது
அவளதுகற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை…
காப்பாற்ற வந்த கடவுளால் கர்ப்பமுண்டாகிவிட்டது….
எல்லாம் தெரிந்தவனால் எதையும் தடுக்கமுடியவில்லை.
தீபாவளிக்கான கதைகள் அவரவர் மனம்போன
போக்கில் இருக்கட்டும்…அதனாலென்ன…
கொண்டாடஒரு காரணம் கொண்டாடிவிட்டுப்போகட்டும்.
வியாபாரம் பெருகி…
இல்லாதவர்களுக்கு
ஆண்டுக்கு ஒருமுறையாவது
ஊக்கத்தொகையும்…
உடையும்
கிடைக்கிறதே…
ஆயினும்
உலகில் போர்இருக்கும் வரை
அரக்கர்களும் இருப்பார்கள்…
ஆனால் மீட்டெடுக்க
ஆண்டவன்தான் வருவதில்லை.
மதங்களைத் தாண்டி அனைவரும் கொண்டாடப்….
போர் ஒழியவேண்டும்.
அனைத்தும் மதமும் ஒன்றாய்க்
கொண்டாடும் அந்தநாள் என்றுவரும்.
♦
