
மிகுந்த சோம்பலினால்
லட்சியங்கள் ஏதுமில்லை
உலகம் அதுவே தன்னை பராமரித்துக் கொள்ளட்டும்
என்னிடத்தில் ஒருசில நாட்களுக்கான உணவுப் பொருட்கள்
என் அடுப்பருகே ஒரு கட்டு சுள்ளிகள்
மாயையை பற்றியும்
உள்ளெளி பற்றியும்
வெட்டிப்பேச்சேதற்கு
கால்களை சுகமாய் நீட்டி படுக்கையில்….
நள்ளிரவில் கூரையில் விழும் மழையின் ஓசை.
………
