
ஆசிரியர் பக்கம்
25.06.2024 (செவ்வாய்க் கிழமை)
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : 'நான் கிருஷ்ணதேவராயர்' நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
மோகினி : யார் எழுதியது?
அழகியசிங்கர் : ரா.கி. ரங்கராஜன்
மோகினி : கிரிக்கேட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கிறது. இந்த முறை யாருக்குக் கிடைக்கும்.
அழகியசிங்கர் : இந்த முறை இந்தியாவிற்குத்தான் கிடைக்க வேண்டும். இதுவரை எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. ஆனால் கடைசி பைனலில் இந்தியா சொதப்பினாலும் சொதப்பிவிடும்.
மோகினி : புதுமைப்பித்தன் கதைகள் தொகுதி 1 கொண்டு வந்துள்ளீர்களே? அதன் நோக்கம் என்ன?
அழகியசிங்கர் : எனக்குப் பிடித்த 11 கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துள்ளேன். இன்னும் தொடர்ந்து புதுமைப் பித்தன் புத்தகங்களைக் கொண்டு வருவேன்.
ஜெகன் : மொத்தத் தொகுதி புதுமைப்பித்தன் புத்தகம் ரூ.100க்கு தருகிறார்களே?
அழகியசிங்கர் : உண்மைதான் ஆனால் என் அளவில்
தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்டு வந்துள்ளேன். இந்தத் தொகுதியில் கலியாணி என்ற கதை எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பயம் இருந்தது. வயதானவனை வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் பிற ஆண்களுடன் பெண்கள் போகவில்லை.
மோகினி : இப்போது உள்ள பெண்கள் கள்ளக் காதலருடன் சேர்ந்துகொண்டு கணவனையே கொன்று விடுகிறார்கள்.
அழகியசிங்கர் : விஷச் சாராயம் குடித்து இறந்து போனவர்களைப் பற்றி செய்தி வாசிக்கும்போது ரொம்ப கேவலமான நிலையை உணர்ந்தேன். இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்.
மோகினி : உண்மைதான்
அழகியசிங்கர் : கருணாபுரம் கள்ளச்சாராயத்தால் பலி 40 என்று என்பா எழுதினோம். வேற வழி. எங்கள் ஆத்திரத்தை அதன் மூலம் தீர்த்துக் கொண்டோம்.
ஜெகன் : ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் என்ன வேண்டிக் கொள்வீர்?
அழகியசிங்கர் : இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கிறேனே. இப் புத்தகங்களை எப்படியாவது படிக்க வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.
ஜெகன்: உங்கள் அருமை யாருக்கும் தெரியவில்லை.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 11.09)
