
மஹாபாரதத்தில் காந்தாரி
மணந்தது குருடனான
திருதராஷ்ட்ர மன்னனை.
உமக்கு கண்ணுக்கு கண்ணாக
இருக்கிறேன் நான் ,எனாமல்,
உமக்கு இல்லாத பார்வை
எமக்கும் வேண்டமென,
கண்களை கட்டிக் கொண்டாள்!
போற்றினர் அனைவரும் அவளை
பத்தினி தெய்வமென!
தன் நூறு மகவுகளையும்
முகம் பார்த்து
வளர்க்கவில்லை அவள்!
அன்னையின் கண் நோக்கி
வளராத பிள்ளைகள்,
அற நெறியை விட்டு,
அரக்க குணம் கொண்டு,
பாண்டவருடன் போரிட்டு,
அழிந்தனர் அனைவரும்!
காந்தாரி
கண்ணிருந்தும் குருடானவள் !

அருமை!
Thank you 🙏
Super!
She followed an escapism
நன்றி !