அழகியசிங்கர்/ஒரு கவிதை எழுதுங்கள்

காலையில்
என்
நூலகத்திலமர்ந்து
இந்தக் கார்டில்
ஒரு கவிதை எழுதுகிறேன்
நான் எழுதுவதை
நானே
படிக்கிறேன்
மற்றவர் பற்றி
எனக்குக் கவலை இல்லை
என் கையெழுத்து
கோணல் மாணலாகப்
போய்க் கொண்டிருக்கிறது
என்று இன்று காலை
அறிந்தேன்
கவிதை எழுது எழுது
என்கிறது மனம்
எழுதிக் கொண்டே இருக்கிறேன்

(17.05.2025 அன்று தபாலில் எழுதிய கவிதை)