அழகியசிங்கர்/தபால் ஆபீஸ்

மேற்கு மாம்பலம்
தபால் ஆபீஸில்
தினமும் தபால்கள்
போட வருவேன்
அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்து
புன்னகைப்பார்கள்
ஆனால்
ஏனோ தெரியவில்லை
வேறு தபால் ஆபீஸை
எனக்குப் பிடிப்பதில்லை

(24.05.2025 அன்று தபாலில் அனுப்பிய கவிதை. இன்னொரு கவிதை வரவில்லை)