ஆர் வத்ஸலா/மாமனிதர்

மாளிகையில் பிறந்து
பட்டாடை உடுத்தி வளர்ந்து
பள்ளி முதல்
உயர் கல்வி வரை
இங்கிலாந்தில் படித்தவர்

ஒற்றை ஆடை அணிந்தவரின் மெல்லிய குரலுக்கு செவி சாய்த்து
முரட்டு கதர் கட்டி
அடி வாங்கியும்
அகிம்சை காத்து
ஒன்பதாண்டு சிறையில் வாழ்ந்தவர்

எம்மதமும் சம்மதம் என்றவர்
குழந்தையில் தெய்வம் கண்டவர்
உடை மேல் ரோஜா மலரும்
உள்ளம்‌ நிறைய அன்பும்
அவரது அடையாளங்கள்

படிகளில் தாவித் தான் ஏறும் பழக்கம் அவருக்கு
அதில் சேமித்த நேரத்தை நாட்டின் சேவைக்காக ஒதுக்கவோ என்னவோ!

சார்பு நிலையற்ற கோட்பாட்டை
உலக அரசியலில் அறிமுகம் செய்து
நாட்டின் மதிப்பை கூட்டியவர்

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில்
முழங்கும்
அவருடைய
”ஜெய் ஹிந்த்”
நாடு முழுவதும் எதிரொலிக்கும்
ஒவ்வொரு ஆண்டும்

தொலைநோக்குடைய
தந்தை போல்
தொடக்க நாட்களில்
நம் நாட்டை கை பிடித்து
நடத்திச் சென்ற
மாமனிதர்
(இன்று ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள்)