
பயத்துடன் விடியும் காலை
குரங்குகள் வருமோ என்று
மதில் சுவர் ஓரம் ஒன்று
தொழுவத்து ஓட்டில் ஒன்று
முருங்கையில் ஊஞ்சலாடி
ஒடிந்ததும் ஓடும் ஒன்று
வயிற்றினில் பிள்ளை யேந்தி
சூலுற்ற குரங்கின் பின்னால்
கவனமாய்க் காவல் போகும்
கிழடான ஆண் குரங்கு
பப்பாளிப் பழம் கடிக்கும்
காக்கைகள் சத்தம் போட
கண்ணாடி கண்மை டப்பி
சிணுக்கோரி ஜன்னலோரச்
சாந்தெல்லாம் ஒளிந்து கொள்ள
தங்கரளிப் பூக்கள் மட்டும்
எதிர் பார்க்கும் தேன் குடிக்க
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

மகிழ்ச்சி மௌலி.
ஞானக் கூத்தன் ஆரம்பத்தில் எழுதிவந்த பா வகையில், அப்போது நான் எழுதியது. இப்போதும் எழுதுவது.
ஒரு சொல் கூடப் பா வகையை விட்டுப் பிசிறு தட்டாத இந்தக் கவிதையை ஞானக்கூத்தனுக்கே படைக்கிறேன்.