விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –
(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு சூமில்
வட்டத்திற்குள்ளிருந்தேன்
என்னுள் வட்டமிருந்தது
காட்சிகளாய்த் தெரிந்தவைகளில்
மாற்றமேதுமில்லை
வட்டத்தைத் தாண்ட வேண்டுமென்றிருந்தது
கோட்டினருகில் நின்றேன்
மகிழ்ச்சித் துண்டிக்கப்பட்டது
அவசரமும் நிதானமின்மையும் என்னைத்
தாக்கின
தாண்டிவிட எட்டிக் காலை எடுத்தேன்
வட்டம் பெரிதாகத் தோற்றம் தந்தது
என்கால் தாண்டுதலில் அகப்படாமல்
துண்டிக்கப்பட்ட மகிழ்ச்சித் திரும்பியது
என்னுள் வட்டம் இருக்கிறது
நான் வட்டத்திற்குள் இருக்கிறேன்
வட்டமோ பெரிதாகிக்கொண்டே போகிறது
அழகியசிங்கர்/மின்சார வண்டி – விருட்சம் நாளிதழ்
One Comment on “அழகியசிங்கர்/வட்டம்”
Comments are closed.