அழகியசிங்கர்/ சிக்கல்

                               

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – நாளை
(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் .
9th poem

    சிக்கலாகி இருந்தது
    நூலிருந்து நூல் விலக்க
    சிக்கல் பெருகியது
    நூலிருந்து நூலெடுக்கச்
    சிக்கல் சிக்கல்
    சிக்கலே நூலாக
    மனத்திலிருப்பது தெரிந்தது
    பேச்சில் தெறித்தது
    என்னுள் உருவான சிக்கல்
    உருவமற்றுத் தொலைதூரம் செல்ல
    திரும்பவும் வந்து
    வெருட்டித் தள்ளியது

    நூலிருந்து சிக்கலை எடுக்க
    நூலை அறுப்பதா?

அழகியசிங்கர்/வட்டம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ சிக்கல்”

Comments are closed.