
சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள்
சுற்றம் கண்டார்
சுற்றி வந்தார்
சுற்றமும் சுற்றச்
சுற்றி வந்தார்
மிகுதி கண்டார்
சுற்றமும் சுற்ற
விலக நினைத்தார்
மிகுதியில் திளைக்க
சுற்றம் உதற
விலகி நின்றார்
மிகுதியில் ஒன்ற
சுற்றமும் இல்லை
தனித்து நின்றார்
சுற்றமில்லா
வாழ்க்கைச் சூழல்
தனிமை ஒன்றே
நிலைத்து நிற்க
அவரும் ஒதுங்க
சுற்றமும் ஒதுங்கின

புரிஞ்சா மாதிரியே இருக்கு, ஆனா புரியல