டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9

 துன்பத்துக்கான காரணம் ஆசை 

ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும்
ஆகவே ஒருவன் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)

இதற்கான பொதுவான பொருள்
பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றை பற்ற வேண்டும்
அதற்கு ஒருவன் செய்ய வேண்டியது..
அவன் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால் மட்டுமே முடியும்.
அதைத்தான் வள்ளுவர் இக்குறள் மூலம் கூறுகிறார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)

மெய்,வாய், செவி, மூக்கு,கண் ஆகிய ஐம்பொறிகளின் வழி பிறக்கும் தீய ஆசைகளை அழித்து, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நிற்பவர் நீண்ட காலம் வாழ்வார்

One Comment on “டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9”

Comments are closed.