
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –
(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு சூமில்
கட்டையாய்க் குட்டையாய்
நெட்டையாய் மனிதர்கள்
முகம் அகலமாய்க்
குறுகலாய்
காது கோணலாய்
மனிதர்கள்
சளசளவென்று பேசியும்
கண்ணை மூடியும்
மனிதர்கள்
மௌனமாய்ப் பிராக்குப்
பார்த்தபடியும்
சீட்டி அடித்துக்கொண்டும்
ஏறி குதித்துக்கொண்டும்
மனிதர்கள்
பெரும் சத்தத்துடன்
அடிப்பட்டு ரத்தத்துடன்
மனிதர்கள்
கண்ணை நிமிர்த்தி
எதிர்ப்பக்கம் பார்த்தால்
போகும் வழியெல்லாம் வழியவிட்டபடி
மனிதர்கள்
நின்று நின்று ஒவ்வொரு ஸ்டேஷனாய்ப் போகும்
மின்சார வண்டி

One Comment on “அழகியசிங்கர்/மின்சார வண்டி”
Comments are closed.