விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் -
(15. 08.2025) மாலை 6.30 மணிக்கு
தண்ணீர்தொட்டி நிரப்பப் படாமலிருந்தது
யாராவது தண்ணீர் நிரப்ப வேண்டும்
கிணற்றில் தண்ணீர் உண்டு
தண்ணீர் எடுக்க வாளி
கட்டப்பட்ட உருளையுடன்
கோர்க்கப்பட்டிருந்தது
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து
தண்ணீர் தொட்டியை நிரப்பலாம்
சில மணித்துளிகளில்
தண்ணீர் தொட்டியும் நிரம்பிவிடும்
யாருக்காவது தண்ணீர் தொட்டியில்
நிரம்பி வழிகின்ற தண்ணீரையும்
பயன்படுத்தத் தெரியவேண்டும்
எல்லாம் இருப்பதும்
இருப்பதுபோல் இல்லாமலும் இருக்கிறது
One Comment on “அழகியசிங்கர்/ தண்ணீர் தொட்டி”
Comments are closed.