வைரமுத்து கவிதை

சிறுவயதில்

ஆளுமைமிக்க என் தாத்தாவிடம்

கேள்விகேட்க அஞ்சுவேன்

இப்போது

தொழில்நுட்ப யுகத்தின்

குழந்தையான என் பேரனின்

கேள்விக்கு அஞ்சுகிறேன்

இரண்டு தலைமுறைகளிலும்

அச்சமே எனது ஆசாரம்

என்றாகிவிட்டது

யாது செய்வது?

“அஞ்சுவது அஞ்சல்

அறிவார் தொழில்”