
கடக்கும் பொழுதெல்லாம்
கவனிக்கத் தவறியதில்லை
எப்பொழுதும் எதையோ
எதிர் பர்த்தப்படி
ஜன்னல்
ஓரம் உட்கர்ந்து
தெருவையே வெறித்து
பார்த்துக் கொண்டிருக்கும்
அந்த பெரியவரை.
புதிதாக குடி வந்திருப்பவர்கள் போலும்.
முந்தநாள்தான் அவனைப் பார்தது
முதல் முறையாக மெலிதாகச் சிரித்தார்
இரண்டு நாளாய் காணவில்லை
ஜன்னலும் சாத்தியே இருந்தது
நோட்டமிட்ட அவனை
முறைத்தன பெரியவரின்
முகஜாடையில் ஒரு ஜோடி கண்கள்
நான்காம் நாள்
அந்த வீட்டின் வாசலில்
பச்சை ஓலை ஒன்று கிடத்தியிருந்தது
