
மனித வாழ்க்கையில்
ஆயிரம் ஜன்னல்
மனக் கதவில்
மூடிய ஜன்னல்
குடிசை வாழ் ஏழையின்
அறையிலும் ஜன்னல்
உடையிலும் ஜன்னல்
மாட மாளிகையில்
அழகூட்டும் ஜன்னல்
இறைவன் சந்நிதியில் மணி கோர்த்த ஜன்னல்
காதலியின் கடைக்கண் பார்வை தரும் ஜன்னல்
கள்ளனும் அடைபடும்
சிறைவாச ஜன்னல்
பள்ளிச் சிறாருக்கும்
அடைக்கலம் ஜன்னல்
பேதை பெண்ணுக்கு
வடிகால் ஜன்னல்
இன்ப துன்பம்
பகிர்ந்திடும் ஜன்னல்
அன்பெனும் அக
ஜன்னலை நீ
அகலத் திறந்திடு
வாழ்க்கையே
பேரானந்தம் !
25/01/2025
